Homeசெய்திகள்சினிமாஅரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்... கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஆதங்கம்...

அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்… கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஆதங்கம்…

-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தடுமாற்றத்தால் நடந்த பேரவலம் என்று நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.  
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, கண் பார்வை பாதிப்பு என அடுத்தடுத்து பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். அதில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ