தென்னிந்திய திரை உலகில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2022-ல் நானும் ரெளடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரட்டை ஆண் மகன்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இருவரும் திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தொழில் அதிபர்களாகவும் வலம் வருகின்றனர். மேலும் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதும் வழக்கம். அடுத்தது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது 40 ஆவது பிறந்த நாளை இன்று நவம்பர் 18 கொண்டாடும் நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஹேப்பி பர்த்டே என் உயிர். நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை விட உன் மீதான மரியாதை மில்லியன் மடங்கு அதிகம்” என்று பதிவை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு இந்த பதிவினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகி உள்ளது. அதில் நயன்தாரா கடந்து வந்த பாதை, நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்குமான காதல், திருமணம் அனைத்தும் இடம்பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஆவணப்படத்தினை ரசிகர்கள் பலரும் கண்டுகளித்து வருகின்றனர்.