சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாள் இன்று. தமிழகமே இவரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. மேலும் திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “எனது அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றைக்கும் என்றைக்கும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 12, 2023
திரைத் துறையில் இருவரும் தனித்தனியே தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். திரைத்துறையில் இன்றைய இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருவரும் எந்தப் படமானாலும் அதில் பட்டைய கிளப்பி வசூலில் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் அன்று முதல் இன்று வரை ரஜினியும் கமலும் வசூல் மன்னன்களாக விளங்குகிறார்கள். திரையில் தொழில் ரீதியாக பல போட்டிகள் இருந்தாலும் அதனை ஆரோக்கியமான போட்டியாகவே எடுத்துக் கொள்வார்கள். இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதை பல மேடைகளில் நிரூபித்துள்ளனர். ரஜினிக்கும் கமலுக்கும் வயதானாலும் அவர்களின் ஸ்டைலும் எனர்ஜியும் குறையவே இல்லை என்பதுதான் நிசப்மான உண்மை.