Homeசெய்திகள்சினிமாஹரி, விஷால் கூட்டணியின் 'ரத்னம்'.... அட்டகாசமான முதல் பாடல் வெளியீடு!

ஹரி, விஷால் கூட்டணியின் ‘ரத்னம்’…. அட்டகாசமான முதல் பாடல் வெளியீடு!

-

பிரபல இயக்குனர் ஹரி, விஷால் நடிப்பில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆக்சன் படமாக வெளியான இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.ஹரி, விஷால் கூட்டணியின் 'ரத்னம்'.... அட்டகாசமான முதல் பாடல் வெளியீடு! இந்நிலையில் ஹரி, விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக ரத்னம் என்ற படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, சென்னை, திருச்சி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த படம் 2024 ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் Don’t Worry Don’t Worry Da machi அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு எனும் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ