ஹரி இயக்கும் விஷால் 34 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவர் சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அன்பானவன் அடங்காதவன் அசராதவன் , பஹீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் வெளியான மார்க் ஆண்டனி படமானது உலக அளவில் அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்றது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால், தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சாமி, ஐயா ,ஆறு, உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இதில் விஷாலுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் காட்சியுடன் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரில் இடது புறம் துப்பாக்கியும் வலது புறம் மருத்துவரின் ஸ்டெதெஸ்கோப்பும் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு விஷால் 34 படத்தில் விஷால் மற்றும் ஹரி ஆகிய இருவரின் கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.