ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 21) சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், ஹாரிஸ் ஜெயராஜ், பூமிகா சாவ்லா, எம். ராஜேஷ் ஆகிய படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜெயம் ரவி, பிரதர் படத்தின் டைட்டிலை நான்தான் வைத்தேன் என்று கலகலப்பாக சில சுவாரசியமான விஷயங்களை பேசி வருகிறார்.
#Brother – JayamRavi & HarrisJayaraj dancing together for MakkaMishi song…so cute😁🫶 pic.twitter.com/2YF3jAhv4T
— AmuthaBharathi (@CinemaWithAB) September 21, 2024
அதைத்தொடர்ந்து மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவியும், ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து மேடையில் நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் அக்காவாக பூமிகா சாவ்லாவும் நடித்திருக்கின்றனர். மேலும் பூமிகா சாவ்லாவுக்கு ஜோடியாக நட்டி நட்ராஜ் நடித்துள்ளார். இந்த படம் அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு பாடல்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.