தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான எல்ஜிஎம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் எனும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர், இந்துஜா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம் C.S இசை அமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹரிஷ் கல்யாணுக்கு இது ஒரு தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது. ஹரிஷ் கல்யாணும், எம்.எஸ். பாஸ்கரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் ஈகோ கிளாஸ் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தினை கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் இந்துஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ஹரிஷ் கல்யாண், “இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இப்படம் நிச்சயம் இடம்பெறும். நீங்கள் கொடுத்த அன்பினால் தான் நாங்கள் இங்கு நிற்கிறோம். மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதனால் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு அதிகமாகியுள்ளது” என்று தொடர்ந்து பேசினார்.
அதேசமயம் மேடையில் பேசுவதற்கு முன்னதாக பார்க்கிங் பட வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஹரிஷ் கல்யாண் இயக்குனர் ராம்குமாருக்கு தங்க காப்பு ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.