Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட டிரைலர் வெளியானது!

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட டிரைலர் வெளியானது!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் டீசல், லப்பர் பந்து உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் ,பார்க்கிங் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.  இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைக்க ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட டிரைலர் வெளியானது! இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன், ராம ராஜேந்திரன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதைத்தொடர்ந்து ‘செல்லக் கிளியே’ எனும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரின் மூலம் இந்த படம் கார் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஹரிஷ் கல்யாண் வாடகைக்கு இருக்கும் வீட்டின் முன் காரை பார்க்கிங் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறார் என்பது சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எம் எஸ் பாஸ்கர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹரிஷ் கல்யாணை இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான பரிமாணத்தில் காண முடிகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ