தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவரின் பார்க்கிங் திரைப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாம் சி எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். கார் ஒன்றை பார்க்கிங் செய்வதனால் ஏற்படும் ஈகோ கிளாஸ் அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை மையக்கருவாக கொண்டு இப்படம் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை சேமித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
HarishKalyan thanks Audience for thr overwhelming response for #Parking❤️pic.twitter.com/aVsYWnzEpa
— AmuthaBharathi (@CinemaWithAB) December 2, 2023
அந்த வீடியோவில் அவர், “ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் நன்றி. பிரஸ், சோசியல் மீடியா போன்றவர்கள் பார்க்கிங் படத்தை மிக அழகாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளீர்கள். பார்க்கிங் படத்திற்கு நீங்கள் கொடுக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி. தியேட்டருக்கு சென்று படம் பார்க்காதவர்கள் உங்களுடைய பிரெண்ட்ஸ் , ஃபேமிலியிடம் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க சொல்லுங்கள் இது என் வேண்டுகோள். பார்க்கிங் படமானது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். மக்களாகிய நீங்கள் நிறைய படத்தை ஆதரித்து அதற்கு வெற்றியை கொடுத்திருக்கிறீர்கள். அந்த வரிசையில் பார்க்கிங் படத்தையும் கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.