Homeசெய்திகள்சினிமாபொங்கல் பந்தயத்தில் இணைகிறதா ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'?

பொங்கல் பந்தயத்தில் இணைகிறதா ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’?

-

ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. பொங்கல் பந்தயத்தில் இணைகிறதா ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'?இதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். மேலும் இவரது நடிப்பில் சில படங்கள் உருவாகி இருக்கும் நிலையில் அந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன. அதில் ஒன்றுதான் டீசல் திரைப்படம். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் எஸ் பி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சண்முக முத்துசாமி இந்த படத்தை இயக்க திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களும் இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருந்து வருகின்றன. இருப்பினும் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.பொங்கல் பந்தயத்தில் இணைகிறதா ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'? ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தினை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் அஜித்தின் விடாமுயற்சி, ராம்சரணின் கேம் சேஞ்சர், அருண் விஜயின் வணங்கான் ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதால் டீசல் திரைப்படமும் அதே நாளில் திரைக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அப்படி இந்த படம் பொங்கலுக்கு வெளிவரவில்லை என்றால் 2025 ஜனவரி மாதத்தின் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ