Homeசெய்திகள்சினிமாஇன்று முதல் ஓடிடியில் வெளியாகும் ஹர்காரா!

இன்று முதல் ஓடிடியில் வெளியாகும் ஹர்காரா!

-

ஹர்காரா படத்தின் ஓ டி டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஹர்காரா படம் ஆனது, V1 மர்டர் கேஸ் திரைப்படத்தில் நடித்திருந்த ராம் அருண் காஸ்ட்ரோ எழுதி, இயக்கி, நடித்துள்ள படமாகும். இதில் மற்றொரு கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும் கௌதமி சவுத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலர்ஃபுல் பீட்டா மூமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராம் சங்கர் இசையமைத்துள்ளார். பிலிப் ஆர் சுந்தர் லோகேஷ் இளங்கோவன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை இப்படம் கூறுகிறது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று oct 1 ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

MUST READ