Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்தில் களமிறங்கும் ஹாரி பாட்டர்... ஏற்பாடுகள் தீவிரம்...

ஓடிடி தளத்தில் களமிறங்கும் ஹாரி பாட்டர்… ஏற்பாடுகள் தீவிரம்…

-

ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி ஹாரி பாட்டர் திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெப் தொடராக வெளியாக உள்ளது.

ஜே.கே.ரௌலிங் கற்பனையில் நாவலாக வெளியான ஹாரி பாட்டர் கதைகள், உலகெங்கும் ஹிட் அடித்தன. நாவலுக்கு கிடைத்த வெற்றி, திரைப்படம் உருவாகவும அடித்தளமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, நாவலில் இருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும், திரைக்கு வந்தன. பல பாகங்களாக வெளியான ஹாரிபாட்டர் திரைப்படங்கள் இதுவரை இல்லாத வகையில் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் வசூல் ஈட்டி உலகின் மாபெரும் ஹிட்டாக அமைந்தது. அதுமட்டுமன்றி படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் பெயரும், புகழும் உச்சிக்கு சென்றன.

2001- முதல் 2011-ம ஆண்டு வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் 8 ஹாரிபாட்டர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஒரு பாகம் மட்டுமல்ல, அனைத்து பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. அதுவரை இல்லாத வகையில் புது அனுபவத்தை ரசிகர்களுக்கு, ஹாரி பாட்டர் திரைப்படங்கள் கொடுத்தன. இத்திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என இந்திய மொழிகளிலும் மற்ற மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ஹாரி பாட்டர் ரசிகர்களுக்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஹாரி பாட்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெப் தொடராக வெளியாக உள்ளன. ஹெச்பிஓ மேக்ஸ் தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளது. இதனால் ஹாரி பாட்டர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ