தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இவர் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து “காதல் தி கோர்” என்ற படத்தில் நடித்துள்ளார். மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜியோ பேபி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தான் நிமிஷா ஷஜயன் நடிப்பில் உருவான”தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தை இயக்கியிருந்தார்.ஆரம்பத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட காதல் தி கோர் திரைப்படம் தற்போது வருகிற 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது.இருப்பினும் இப்படத்தில் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பது போன்ற கருத்து உள்ளதால் கத்தார், குவைத் போன்ற நாடுகளில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகனான மம்மூட்டி தான் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கவலையிலும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
மம்முட்டி தற்போது பிரம்மயுகம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.