சூர்யா 45 படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்திற்கு சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சூர்யா 45 படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு தான் சூர்யா 45 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.