Homeசெய்திகள்சினிமாஅருவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தான்!

அருவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தான்!

-

அருவி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டைப் பெற்ற படம் அருவி. அருவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தான்!மலையில் தோன்றும் ஆறு தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்து செல்லும் வழியில் உள்ள பள்ளங்களை நிரப்பி வழியெல்லாம் வளமாக்கி கடைசியில் உச்சியில் இருந்து அருவியாக விழும். அதுபோல ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை எல்லாம் அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து அனைவரையும் மனதளவில் நல்வழிப்படுத்தி இறுதியில் மறைந்து போவாள். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அருண் பிரபு இயக்கியிருந்த இந்த படம் இன்று வரையிலும் பலரின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது.
அதைத்தொடர்ந்து அருண் பிரபு பிரதீப் ஆண்டனியை ஹீரோவாக வைத்து வாழ் திரைப்படத்தை இயக்கியிருந்தார். எதிர்பாராத திருப்பங்களை கொண்ட இப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அருவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ இவர் தான்!இப்படம் கமர்சியல் பொழுதுபோக்கு படமாக உருவாக இருப்பதாகவும் விஜய் ஆண்டனியே இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ