தளபதி என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தான் இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்து இருக்கிறார். அதன்படி கடந்த ஆண்டு லைக்கா நிறுவனத்துடன் ஜேசன் சஞ்சய் கூட்டணி அமைக்க போவதாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை படப்பிடிப்புகள் பற்றிய தகவல் எதுவும் வெளிய வரவில்லை. இருப்பினும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி கவின், துருவ் விக்ரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. பின்னர் கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் தான் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அடுத்தது இந்த படத்திற்கு இசையமைக்க நடிகர் அனிருத்தை அணுகியதாகவும் அவர் ஒரு சில காரணங்களால் அதை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இசை அமைப்பாளர் தமன், ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.