Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் சீசன் 8இன் அடுத்த ஹோஸ்ட் இவர் தான்.... ஒரு வழியா சீக்ரெட்டை உடைக்க...

பிக் பாஸ் சீசன் 8இன் அடுத்த ஹோஸ்ட் இவர் தான்…. ஒரு வழியா சீக்ரெட்டை உடைக்க போறாங்க!

-

தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரியாலிட்டி ஷோக்களுக்காகவே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.பிக் பாஸ் சீசன் 8இன் அடுத்த ஹோஸ்ட் இவர் தான்.... ஒரு வழியா சீக்ரெட்டை உடைக்க போறாங்க! அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சண்டை, கலவரம், காமெடி, பாடல், நடனம் போன்ற சுவாரசியமான சில விஷயங்கள் இடம்பெற்று ரசிகர்களை ரசிக்க வைக்கும். சீரியல்களை விட இந்த நிகழ்ச்சிக்கு தான் டிஆர்பியும் அதிகம் ஏறும். கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் தனக்கு சினிமாவில் இருக்கும் சில தவிர்க்க முடியாத கமிட்மென்ட்களால் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தன்னால் தொகுத்து வழங்க முடியாது என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார் கமல். இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி ஆகிய மூவரில் ஒருவர் நிகழ்ச்சியில் அடுத்த ஹோஸ்டாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. பிக் பாஸ் சீசன் 8இன் அடுத்த ஹோஸ்ட் இவர் தான்.... ஒரு வழியா சீக்ரெட்டை உடைக்க போறாங்க!பின்னர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 4) மாலை 6 மணி அளவில் அந்த புதிய ஹோஸ்ட் யார் என்பதை அறிவிக்கப் போகிறது விஜய் டிவி. எனவே அந்த புதிய தொகுப்பாளர் யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MUST READ