Homeசெய்திகள்சினிமாஎன்னிடம் அதைப் பற்றி கேட்கவே இல்லை.... விவாகரத்தை மறுக்கும் ஜெயம் ரவியின் மனைவி!

என்னிடம் அதைப் பற்றி கேட்கவே இல்லை…. விவாகரத்தை மறுக்கும் ஜெயம் ரவியின் மனைவி!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது காதலிக்க நேரமில்லை, பிரதர், ஜீனி போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். என்னிடம் அதைப் பற்றி கேட்கவே இல்லை.... விவாகரத்தை மறுக்கும் ஜெயம் ரவியின் மனைவி!அடுத்தது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் தனி ஒருவன் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் ஜெயம்ரவி. இந்நிலையில்தான் நேற்றைய முன் தினம் (செப்டம்பர் 9) தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதாவது ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ், ஆயன் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து ஜெயம் ரவி தனது மனைவி மகன்களுடன் சுற்றுலா செல்வது, தீபாவளி, பொங்கல் என்றால் புகைப்படங்களை வெளியிடுவது என சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வந்தனர் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இருவரின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டது. என்னிடம் அதைப் பற்றி கேட்கவே இல்லை.... விவாகரத்தை மறுக்கும் ஜெயம் ரவியின் மனைவி!இதனால் ஜெயம் ரவி, தான் வெளியிட்ட அறிக்கையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நடிகர் ஜெயம் ரவி தன்னிடம் ஒப்புதல் பெறாமல் தாமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் ஜெயம் ரவியிடம் மனம் விட்டு பேச பலமுறை முயற்சித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் ஜெயம் ரவி எடுத்த இந்த முடிவில் ஆர்த்திக்கு சம்மதம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

MUST READ