Homeசெய்திகள்சினிமா'ராயன் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியாக இருப்பார்'..... நடிகர் தனுஷ்!

‘ராயன் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியாக இருப்பார்’….. நடிகர் தனுஷ்!

-

நடிகர் தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் இவர் தனது 50வது படமான ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.'ராயன் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியாக இருப்பார்'..... நடிகர் தனுஷ்! தனுஷே இயக்கி நடித்திருக்கும் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷ், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. 'ராயன் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியாக இருப்பார்'..... நடிகர் தனுஷ்!இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் நடிகர் தனுஷ், பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் தனுஷிடம், “ராயன் திரைப்படத்தை நீங்கள் இயக்கி நடிக்கவில்லை என்றால் அந்த ராயன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு யாரை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தனுஷ், “ரஜினிகாந்த் சாரை தேர்ந்தெடுத்திருப்பேன்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ