Homeசெய்திகள்சினிமாகுழந்தைகள் கொண்டாடும் குரங்குபெடல்... வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்...

குழந்தைகள் கொண்டாடும் குரங்குபெடல்… வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்…

-

- Advertisement -
முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கிய சிவகார்த்திகேயன், சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். இதுவரை 5 திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். அவரது தயாரிப்பில் உருவான திரைப்படம் கொட்டுக்காளி.

இப்படத்தில் பிரபல நடிகர் சூரி நாயகனாக நடிக்கிறார். மலையாள நட்சத்திரம் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். அண்மையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் முதல் தோற்றம் வெளியானது. அதில் படத்திற்கு குரங்கு பெடல் என்று தலைப்பு வைத்திருந்தனர். கமல் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், குரங்கு பெடல் திரைப்படம் குழந்தைகள் கொண்டாடும் படம் என்றும், படம் பார்ப்போரின் சிறுவயதை நிச்சயம் நினைவுக்கு கொண்டு வரும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

MUST READ