Homeசெய்திகள்சினிமாபிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!

பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!

-

பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட்:

வடக்குப்பட்டி ராமசாமி

சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கி உள்ள படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தை இயக்கியிருந்தார்.பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ! இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியானது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெவில்பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!

சவரக்கத்தி பட இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ள படம் டெவில். விதார்த், பூர்ணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்குமா நெஞ்சம்

விஜய் டிவியில் வர்ணனையாளராக பணியாற்றிய ரக்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் மறக்குமா நெஞ்சம். பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!பள்ளி பருவத்தில் உண்டாகும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

லால் சலாம்

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக
வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லவ்வர்பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் நடித்துள்ள படம் தான் லவ்வர். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சைரன்

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் தான் சைரன். இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் வெளியாகும் முக்கியமான படங்களின் லிஸ்ட் இதோ!ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

MUST READ