Homeசெய்திகள்சினிமாநானியின் ஹாய் நான்னா... டீசர் வெளியானது...

நானியின் ஹாய் நான்னா… டீசர் வெளியானது…

-

நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாய் நான்னா படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம் அப்துல்லா இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.

வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ‘நிழலிலேயே’ மற்றும் நான்னா என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் டீசரையும் படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

தெலுங்கு மட்டுமன்றி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள படத்தின் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆக்‌ஷன், அதிரடி இல்லாமல் மாறுபட்ட வேடத்தில் நானி நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

MUST READ