ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர். இவர் நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஆம்பள, இமைக்கா நொடிகள், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இவர் ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ. ஆர். கே சரவணன் இயக்கத்தில் ‘வீரன்‘ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இந்த படத்தில் வினய் ராய், ஆதிரா ராஜ் ,சசி செல்வராஜ் , முனீஸ் காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா, ஒரு கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆதிரா ராஜும், வில்லனாக வினய் ராயும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இப்படத்தின்
‘பப்பர மிட்டாய்’ எனும் பாடல் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலரும் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இத்திரைப்படமானது, வருகின்ற ஜூன் 2-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னல் முரளி திரைப்படம் இதே மாதிரி கதை தான். எனவே வீரன் அந்தப்படத்திற்கு போட்டியாக களமிறங்குகிறது