ஹிப் ஹாப் ஆதி மற்றுமொரு புதிய படத்தை தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹிப் ஹாப் ஆதி ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர். பின்னர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து ஆம்பள, அரண்மனை, தனி ஒருவன் என பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர் மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், வீரன் என பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் கடைசியாக பிடி சார் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி உலகப் போர். போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இவ்வாறு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ள ஹிப் ஹாப் ஆதி தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி கடைசி உலகப் போர் படத்திற்கு பிறகு புதிய படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார் ஹிப் ஹாப் ஆதி. மேலும் இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியே ஹீரோவாகவும் நடிக்கப் போகிறாராம்.
ஆனால் இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கவில்லை எனவும் இதனை ஹிப் ஹாப் ஆதியின் உதவியாளர் பரதன் என்பவர் இயக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது 2030, 2050, 2080 ஆகிய காலகட்டங்களில் நடைபெறும் கதையாக உருவாக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.