Homeசெய்திகள்சினிமாஹிப் ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்'.... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

-

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஹிப் ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்'.... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே சமயம் இவர் இயக்குனராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி, தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார். அந்த வகையில் கடைசி உலகப் போர் எனும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி, நடித்து, இசையும் அமைத்திருக்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு கடைசி உலகப் போர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நட்டி நடராஜ், அனகா, நாசர், ஹரி உத்தமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போர் தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது.ஹிப் ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்'.... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு! ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி கடைசி உலகப் போர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் இப்படமானது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ