Homeசெய்திகள்சினிமாஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி, தனி ஒருவன், ஆம்பள, வணக்கம் சென்னை, அரண்மனை போன்ற பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைத்திருந்தார். அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து நட்பே துணை, வீரன் போன்ற படங்களிலும் நடித்தார். கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த பிடி சார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி என்ன படம் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி தற்போது ஹிப் ஹாப் ஆதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஹிப் ஹாப் ஆதி கடைசி உலகப் போர் எனும் புதிய படத்தில் நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!போர் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தானே தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். கடைசி உலக போர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

MUST READ