Homeசெய்திகள்சினிமாவேர்ல்டு டூர் செல்லும் ஹிப்ஹாப் ஆதி... பல நாடுகளில் இசைக்கச்சேரிக்கு திட்டம்... வேர்ல்டு டூர் செல்லும் ஹிப்ஹாப் ஆதி… பல நாடுகளில் இசைக்கச்சேரிக்கு திட்டம்…
கோலிவுட் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். அதற்கு முன்பாக பல திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். இவரது சொந்த வாழ்வையே பயோபிக்காக எடுத்து அவரே அதில் நடித்தும் இருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் ஆதி.
சுந்தர் சி இயக்கத்தில் வௌியான அனைத்து அரண்மனை திரைப்படங்களுக்கும் ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வீரன். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஆதி நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் வரும் மே மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், வேர்ல்ட் டூர் செல்ல இருப்பதாக ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். அதன்படி, பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.