- Advertisement -
நடிகர், இயக்குநர், இசை அமைப்பாளர் என பன்முகத் தன்மையோடு திரைத்துறை கலக்கி வரும் நாயகன் ஹிப்ஹாப் ஆதி. கோவையில் பிறந்து வளர்ந்த ஆதி, இசையின் மீது கொண்ட காதலால் சென்னை வந்து தனது கடின உழைப்பால், இன்று முன்னணி இசை அமைப்பாளராக உருவெடுத்துள்ளார். ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப் ஆதி பல படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப்ஹாப் ஆதி.
தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களை தழுவி அவரே இயக்கி நடித்த திரைப்படம் தான் மீசைய முறுக்கு. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சுந்தர் சி இயக்கிய பெரும்பாலான அரண்மனை உள்பட பெரும்பாலான படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி பாடிய பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளன.
மீசைய முறுக்கு படத்தைத் தொடர்ந்து, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இத்திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து இறுதியாக அவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியானது. மரகத நாணயம் படத்தின் ஏஆர்கே சரவணன் இப்படத்தை இயக்கினார். தற்போது, ஆதி நடித்துள்ள திரைப்படம் பிடி சார். கார்த்திக் வேனுகோபாலன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய ஹிப்ஹாப் ஆதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
#HHT7 Shoot Wrapped… Happy birthday HipHop Aadhi bro pic.twitter.com/ydjOgqVhSA
— SmartBarani (@SmartBarani) February 20, 2024