ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி தற்போது கதாநாயகனாகவும் மக்கள் மனதை கவர்ந்து வருகிறார். தற்போது மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவணன் இயக்கத்தில் ‘வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை அடுத்து கனகவேல் இயக்கத்தில் பிடி சார் என்ற படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை அனகா கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்னரே இந்த ஜோடி நட்பே துணை படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்த படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கவும் தயாரிக்கவும் இசையமைக்கவும் இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீசைய முறுக்கு, சிவக்குமாரின் சபதம் ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இயக்குனராக களமிறங்கியுள்ளார் ஆதி.