கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். பின் பிச்சைக்காரன் இரண்டாம் பாகமான ‘பிச்சைக்காரன் 2‘ படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.
இப்படத்தில் இவருடன் காவியா தாபர், மன்சூர் அலிகான் , விஜய் தேவ், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியானது.
காதல் செண்டிமெண்ட் காமெடி மாஸ் என அனைத்து காட்சிகளிலும் விஜய் ஆண்டனி மாஸ் காட்டியிருக்கிறாராம். மேலும் இது பிச்சைக்காரன் முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை என்றும் முதல் பாகத்திற்கு எதிர்மறையாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இப்படத்தின் கதை ஆனது குழந்தை கடத்தல், மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசப்பட்டுள்ளது.
இதில் விஜய் ஆண்டனி குருமூர்த்தி சத்யா என்ற இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு லட்சம் கோடி சொத்துக்கள் உடைய பணக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின்
சொத்துக்களை அடைய விரும்பும் ஒரு கும்பல் குருமூர்த்திக்கு மூளை மாற்று அதுவே சிகிச்சை செய்து விடுகின்றனர். இறுதியில் குருமூர்த்தி கதாபாத்திரம் சொத்துக்களை கைப்பற்றியதா? இல்லையா? என்பதே மீதமுள்ள கதையாகும்.
மேலும் விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காவியா தாபர், ஒய் ஜி மகேந்திரன், ராதா ரவி ஆகியோர் அவர்களின் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனியின் இசை,எடிட்டிங், ஒளிப்பதிவு இவை அனைத்தும் சிறப்பாக இருக்கின்றனவாம்.
இருந்த போதிலும் இப்படத்தின் திரைக்கதை மோசமாக உள்ளதாகவும் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் ரசிகர்களிடம் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தங்கச்சி சென்டிமென்ட் ஓவராக இருப்பதனால் ரசிகர்களை எரிச்சல் ஊட்டும் விதமாக அமைந்துள்ளது என்றும் படத்தில் யோகி பாபுவின் காமெடி சரியாக அமையவில்லை என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
எனவே விஜய் ஆண்டனி இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இருந்தால் இப்படம் நன்றாக இருந்திருக்கும் என்று பல தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.