Homeசெய்திகள்சினிமாதமிழ் படங்களை தூக்கி சாப்பிட்ட 'மஞ்சுமெல் பாய்ஸ்'..... தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை?

தமிழ் படங்களை தூக்கி சாப்பிட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’….. தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை?

-

திரை உலகில் ஓடிடியின் வருகைக்குப் பிறகு பல மொழி திரைப்படங்களை ரசிகர்கள் பெருமளவு பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அதன் விளைவாகவே தற்போது பான் இந்திய திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலையாளத்தில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் தமிழ் மக்களை வெகுவாகக் கவர்கின்றன. பிரம்மாண்டமான செட்டுகளையோ ஆக்சன் காட்சிகளையோ நம்பாமல் பார்வையாளர்களை ஒன்றி, பார்க்கும் படியான கதைகளையும் அதற்கேற்ற திரைக்கதையையும் உருவாக்கி அசத்தி விடுகின்றனர் மலையாள இயக்குனர்கள். சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் சைலன்டாக ரிலீஸ் ஆகி தற்போது திரையரங்குகளில் மக்கள் கூட்டத்தை அலைமோத வைத்துள்ளது. கொடைக்கானலில் பிரபல சுற்றுலாத் தளமான குணா குகைக்கு செல்லும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் ஆழமான பள்ளத்தில் மாட்டிக் கொள்கிறார். அவரை காப்பாற்றும் பிற நண்பர்கள் செய்யும் எமோஷனலான விஷயங்கள் தான் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் கதை. பெரிய நட்சத்திர பட்டாளங்கள் ஏதுமின்றி இப்படம் வெளியாகி இருந்ததால் மிகப்பெரிய அளவில் படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் படம் வெளியான பின்பு பார்வையாளர்களின் பாசிட்டிவ் ரிவ்யூ மின்னல் வேகத்தில் பரவி சினிமா ரசிகர்கள் இப்படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். கமல்ஹாசன், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் போன்ற திரைப்பிரபலங்கள் உட்பட படத்தைப் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தமிழ் படங்களை தூக்கி சாப்பிட்ட 'மஞ்சுமெல் பாய்ஸ்'..... ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை?அதன் விளைவாக நாளுக்கு நாள் படத்தினை திரையிட காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். ஹைலைட்டாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்திற்கு 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய வசூல் நிலவரப்படி இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலையும் தொட்டிருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது இந்த மஞ்சுமெல் பாய்ஸ். மேலும் மொத்தமாக இப்படம் எவ்வளவு வசூலை பெறும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

MUST READ