Homeசெய்திகள்சினிமாஹ்ரித்திக் ரோஷனின் 'ஃபைட்டர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!

ஹ்ரித்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்!

-

- Advertisement -

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகி வரும் ‘ஃபைட்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினை வார், பதான் போன்ற படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வி பாதையில் பயணித்த நேரத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் ஆயிரம் கோடியை வசூல் சாதனை செய்து இமாலய வெற்றியை தொட்டது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மிரட்டி இருந்தார். இப்படத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டை காட்சிகள் அமைந்திருந்தன.மேலும் சல்மான் கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். சல்மான் கானின் ஏக் தா டைகர் மற்றும் பதான் திரைப்படங்களின் கதைகளை இணைத்து புதிய ஸ்பை யூனிவர்சை சித்தார்த் ஆனந்த் அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் தொடர்ச்சியாகவே பல ஸ்பை திரில்லர் படங்கள் தயாராக உள்ளன. ஹிரித்திக் ரோஷனின் முந்தைய படமான விக்ரம் வேதா படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இது தமிழ் படமான விக்ரம் வேதாவின் ஹிந்தி ரீமேக் ஆகும்.

இவ்வாறாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோரின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளன. தற்போது இவர்கள் இணையும் ‘ஃபைட்டர்’ படத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த வார் படத்தில் ஆக்சன் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. அதேபோலவே ஃபைட்டர் படத்திலும் ஆக்சன் காட்சிகள் பிரமாண்டமாக தயாராகி வருகின்றன.
இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் ஆகியோரும் நடிக்கின்றனர். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் மார்ஃபிலிக்ஸ் பிக்சர்ஸ் இரு நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கிறது. விஷால் சேகர் இசையமைக்கிறார்.

சுமார் 250 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள இப்படம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று (ஜூன் 26) காலையில் ஹிரித்திக் ரோஷன் ஃபைட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.சித்தார்த் ஆனந்த் மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் வெளிவந்த பதான் திரைப்படம் 2023 ம் ஆண்டு இதே போல ஜனவரி 25ல் தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ