ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஃபைட்டர் படத்தின் டீசர் வெளியானது.
தமிழில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தார். ஹிருத்திக் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இதுவாகும். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு ஃபைட்டர் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். வார் மற்றும் ஷாருக்கானின் பதான் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் சேகர் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
250 கோடி ரூபாய்க்கும் அதிமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபைட்டர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடப்பு ஆண்டில் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதனால், ஃபைட்டர் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷனாக உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.