இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் வசமாக கொண்டுள்ளவர் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் 2019ல் வெளியான வார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை கொடுத்தது. இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் நடித்திருந்தார். பரபரப்பான ஆக்சன் படமான வார் அதன் சண்டைக் காட்சிகளுக்காக பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகமான வார் 2 திரைப்படம் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள “ஸ்பை யுனிவர்ஸ்” லிஸ்டில் வரவுள்ள இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் தெலுங்கு ஸ்டாரான ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். ஸ்பை யூனிவர்ஸ் லிஸ்டில் ஏற்கனவே சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹே போன்ற படங்களும் அதைத்தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார், அதன் தொடர்ச்சியாக ஷாருக்கான் நடித்த பதான், சல்மான் கான் நடித்து சமீபத்தில் வெளியான டைகர் 3 போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த கதைகளின் தொடர்ச்சியாகவே வார் 2 படம் உருவாகி வருகிறது. சல்மான் கானின் டைகர் 3 படத்தில் ஷாருக்கான் 15 நிமிட சண்டைக் காட்சிகளும்,படத்தின் கிளைமாக்சில் ஏஜென்ட் கபீராக ஹ்ரித்திக் ரோஷனும் என்ட்ரி கொடுத்து அசத்தினார். டைகர் 3 கதை முடியும் இடத்தில் இருந்துதான் வார் 2 கதை தொடர உள்ளது. எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் 14, 2025 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. ஸ்பை யூனிவர்சில் வரும் திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்து வரும் நிலையில் வார் 2 படமும் வசூலில் சாதனை படைக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
- Advertisement -