Homeசெய்திகள்சினிமாமருத்துவமனையில் படப்பிடிப்பு... நடிகர் ஃபகத் பாசில் மீது வழக்குப்பதிவு...

மருத்துவமனையில் படப்பிடிப்பு… நடிகர் ஃபகத் பாசில் மீது வழக்குப்பதிவு…

-

 மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். அவர் மோலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மாறுபட்ட வேடங்களை தேர்வு செய்து கச்சிதமாக நடிப்பதில் ஃபகத் கை தேர்ந்தவர். ஹீரோ வேடத்தில் மட்டுமன்றி மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
இதைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்திலும், உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக மாமன்னன் திரைப்படத்திலும் ஃபகத் நடித்திருந்தார். இறுதியாக மலையாளத்தில் ஃபகத் நடித்த ஆவேஷம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ஃபகத் பாசில் மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அவர் நடித்து வரும் பைங்கிலி படத்தின் காட்சிகள் அவரச சிகிச்சை பிரிவில் படமாக்கப்பட்டன. அப்போது, நோயாளிகள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் குழப்பம் நீடித்துள்ளது. இதனால், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு பதிந்துள்ளது.

MUST READ