பிரபல நடிகை அமலா பால் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அமலா பால். அதேசமயம் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் நிமிர்ந்து நில், தெய்வத்திருமகள், விஐபி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 2016 இல் பிரபல இயக்குனர் ஏ எல் விஜயை அமலா பால் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட காரணத்தால் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தனது பிறந்தநாளில் புதிய காதலரை அறிமுகப்படுத்தினார். அதாவது தனது நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். அதன் பின் இருவரும் கொச்சியில் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளிட்டு அறிவித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.