Homeசெய்திகள்சினிமாகன்னடத்தில் மிகப்பெரிய படம் பண்ண போகிறேன்..... நடிகர் சித்தார்த் பேட்டி!

கன்னடத்தில் மிகப்பெரிய படம் பண்ண போகிறேன்….. நடிகர் சித்தார்த் பேட்டி!

-

நடிகர் சித்தார்த் கன்னடத்தில் மிகப்பெரிய படம் பண்ணப்போவதாக பேட்டி கொடுத்துள்ளார்.கன்னடத்தில் மிகப்பெரிய படம் பண்ண போகிறேன்..... நடிகர் சித்தார்த் பேட்டி!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் கடைசியாக கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து மிஸ் யூ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த். இந்த படம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி நாளை திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நயன்தாரா மற்றும் மாதவனுடன் இணைந்து டெஸ்ட் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதேசமயம் குருதி ஆட்டம், எட்டு தோட்டாக்கள் ஆகிய படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தனது 40 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சித்தார்த் தன்னுடைய லைன் அப் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி எட்டு படங்களை கைவசம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

அதில் மிஸ் யூ, சித்தார்த் 40, தி டெஸ்ட் ஆகிய படங்கள் அடங்கும். மேலும் கன்னடத்தில் மிகப்பெரிய படம் பண்ண போவதாகவும் பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளில் படம் பண்ண விரும்புவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இன்னும் ஒரு புதிய படத்தை முடித்துவிட்டதாகவும் அந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

MUST READ