Homeசெய்திகள்சினிமாநகுலுக்கு நான் அக்கா இல்லை..... விழா மேடையில் தேவயானி பேச்சு!

நகுலுக்கு நான் அக்கா இல்லை….. விழா மேடையில் தேவயானி பேச்சு!

-

- Advertisement -

நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான். நகுல் நினைக்கையில் பெருமையாக உள்ளது.

அக்கா – தம்பி இருவரும் ஒரே துறையில் இருப்பது ரொம்ப அபூர்வமானது. இந்த நேரத்தில் எங்கள் அப்பா அம்மா மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்- தனது தம்பியை புகழ்ந்து பேசிய நடிகை தேவயானி!நகுலுக்கு நான் அக்கா இல்லை..... விழா மேடையில் தேவயானி பேச்சு!

கதாநாயகியாக நடித்ததை விட, ஒரே சீனில் (பஞ்சதந்திரம்) நடித்த, எவ்வளவு பெரிய மாத்திரை என்ற வசனத்துடன் பேசும் கதாபாத்திரம் மிகவும் ஃபேமஸ் தேவயானியை புகழ்ந்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் பேச்சு!

பாய்ஸ் படத்தின் துவக்கத்தில் நானும் நகுலும் லிப் டூ லிப் கிஸ் பண்ணிப்போம். அதுவும் ஒரு தடவை இரண்டு தடவை இல்லை. ஷங்கர் சார் நிறைய டேக் எடுப்பாரு- பாய்ஸ் படத்தில் நகுலுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து நடிகர் மணிகண்டன்!

பிளாக் பஸ்டர் புரொடக்சன்ஸ் – டத்தோ சுபாஸ்கரன் தயாரித்து இயக்குனர் ஆர்ஜிகே இயக்கத்தில் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாஸ்கோடகாமா.
வாஸ்கோடகாமா படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் நகுல், ஷாந்தனு, இயக்குனர்கள் கே.எஸ் ரவிக்குமார், அறிவழகன், நடிகைகள் தேவயானி, அர்த்தனா பினு, பாடகர் ஆன்டனிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் நகுல்,நகுலுக்கு நான் அக்கா இல்லை..... விழா மேடையில் தேவயானி பேச்சு!

அக்கா பேசுனதுக்கு பிறகு ரொம்ப எமோஷனல் ஆகி விட்டது. நான் நிறைய பேரிடம் அவ்வளவாக பேச மாட்டேன். முன்னாடி நிறைய பொழம்பிருக்கேன். என்ன நடக்குது என்று தெரியவில்லை.

அக்கா இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அக்கா வந்துட்டாங்க. எதோ ஒரு காரணத்தால், பாய்ஸ் பட வாய்ப்பு கிடைத்தது. பாய்ஸ் படத்தில் தான் சினிமா கற்று கொண்டேன். எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது.‌

சினிமாவில் எனக்கு பல வாய்ப்புகள் வேறு விதமாக கிடைத்தது. வல்லினம் எனக்கு ரொம்ப பிடித்த படம். அந்த படத்தில் இயக்குனர் அறிவழகன் ரொம்ப நம்பினார். சில விஷயங்களை நம்பி தான் ஒவ்வொரு படமும் பண்றோம். ஆனால் படம் சரியாக வரவில்லை என்றால் அதற்கு ஒன்னும் பண்ண முடியாது.

ரவிக்குமார் சாரை பற்றி தெனாலி ஷீட்டில் அக்கா நிறைய சொல்லி இருக்காங்க. இன்னைக்கு அவர் என்னை பாராட்டி பேசியது ரொம்ப சந்தோசம். இப்போது ஒவ்வொரு நொடியும் சந்தோசமாக நினைத்து வாழ்கிறேன்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சாந்தனு,

2011 முதல் எனக்கும் நகுலுக்கும் பழக்கம். தொட்டா ஷாக் அடிக்குற மாதிரி நகுல் அவ்வளவு எனர்ஜி. நிறைய பேர் நிறைய விதத்தில் சாமிங்காக இருப்பாங்க. அதே மாதிரி நகுல் சாமிங் ஸ்டார்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஆசான் என்று அப்பா சொல்லுவார். நான் நகுலிடம் நிறைய விஷயங்களை முன்னேற்றமாக பார்க்கிறேன். மனதளவில் தன்னை நிதானமாக வைத்திருக்கிறார்.
இன்றைக்கு இருக்கும் சினிமா காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது கடினம். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை தேவயானி,நகுலுக்கு நான் அக்கா இல்லை..... விழா மேடையில் தேவயானி பேச்சு!

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. வித்தியாசமான பாணியில் பாடல்கள் வந்திருக்கிறது. என்டர்டெயின்மென்ட் படம் இது.‌ நகுல் பற்றி எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. என் சின்ன தம்பி. அவர் பன்முக திறமையாளர்.
பாய்ஸ் to காதலில் விழுந்தேன் படத்தில் அவர் திறமையை பார்த்து வியந்து போனேன். அவனுக்கு நல்ல கதை & இயக்குனர் & ஸ்கிரிப்ட் தேவை. அவனுக்கான அந்த நேரம் வர வேண்டும்.

என் தம்பி என்பதற்காக சொல்லவில்லை. அக்கா – தம்பி இருவரும் ஒரே துறையில் இருப்பது ரொம்ப அபூர்வமானது. இந்த நேரத்தில் எங்கள் அப்பா அம்மா ரொம்ப சந்தோசமாக இருப்பாங்க. நாங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் அவங்களுக்கு போய் சேர வேண்டும்.
எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இன்னும் நிறைய படங்கள் பண்ணி உன்னை நிரூபிப்பாய் என்று தனது தம்பியை ஊக்கப்படுத்தி பேசினார் தேவயானி.

வெற்றியாளர்கள் ஹீரோ வரிசையில் விரைவில் நகுல் இருக்க வேண்டும் என்றும், நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான். நான் அவனோடு விளையாடியதில்லை. சண்டை போட்டதில்லை. நிறைய அந்த உணர்வுகளை இழந்திருக்கிறோம் என்றும் கூறிய தேவயானி தனது தம்பியுடன் பாசத்தை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன்,

நிறைய சிறிய படங்கள் பண்ணாலும் இது வித்தியாசமான படம். இது அருமையான காமெடி.‌ கே.எஸ் ரவிக்குமார் இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிச்சுருக்காரு. நகுல் ரொம்ப ஜாலியாக பழகுனார். ஆனால் ஜெகன் சொன்ன கருத்தில் மாறுபடுகிறேன். இந்தியன் 2 படத்தில் அவரை ரொம்ப விமர்சித்து பாராட்டி எழுதி இருக்கிறேன். அதை வாபஸ் வாங்குகிறேன். ஏனென்றால் அவர், நான் நல்லதே சொல்லவில்லை என்கிறார்.நகுலுக்கு நான் அக்கா இல்லை..... விழா மேடையில் தேவயானி பேச்சு!

நடிகர்களிடம் இருக்கும் ஒரு குணம், எப்பவும் பாராட்டுனா கண்டுகிடவே மாட்டாங்க. லேசா கில்லுனா அப்படி பேசுவாங்க எனவும், ரவிக்குமார் சார் படத்தில் எத்தனையோ விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் எதுவும் சொன்னதில்லை. ஒரு இயக்குனர் எப்படி இருக்க வேண்டும் என்றால் ரவிக்குமார் சார் மாதிரி இருக்க வேண்டும்.

இந்த படத்தின் கதையை யூகிக்க முடியவில்லை. எல்லோருக்கும் சினிமாவில் ஏற்ற தாழ்வு இருக்கும்.
நான் நிறைய பேரை பாராட்டி எழுதிருக்கேன். அதை கண்டுக்க மாட்டாங்க. விமர்சனம் எழுதுபவர்களை திட்டாதீர்கள். இந்தியன் 2 நல்லா இல்லைனா ? நல்லா இல்லை தான்.‌ எச்சரிக்கையாக சொல்கிறேன். கன்னடத்தில் இருந்து ஒரு நடிகர் திட்டினால், நாங்களும் திருப்பி திட்டலாமா ?
நல்லா இருந்த படத்தை நல்லா இருக்குன்னு தான் சொல்வோம். நல்லா இல்லாத படத்துக்கு எப்படி சொல்ல முடியும்? கமன்ட்ஸ் ஐ ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அது பட்டை தீட்டிய வைரம் மாதிரி.
ஏனெனில் நாங்கள் மக்களோடு இருப்பவர்கள். அதில் ஜெகன் மட்டும் தான் மாறுபடுகிறார். அதனால் தான் அடுத்த கட்டத்துக்கு முன்னேறாமல் இருக்கிறார்.

நீங்கள் என்னை மட்டும் விமர்சிக்கவில்லை. எல்லா யூடியூபரை விமர்சிக்கிறீங்க. தயவுசெய்து அதை செய்யாதீங்க. விமர்சனம் எழுதுவது தவிர்க்க முடியாதது. அது தான் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். நிறைய பேர் வெளிநாட்டு காரர்கள் இங்கு வந்து படம் தயாரிக்குறாங்க. வாஸ்கோடகாமா படத்தின் தலைப்புக்கு ஏற்ப வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார்,

எதிர்த்து பேச ஆள் இல்லை என்றால், சரியாக இருக்காது.‌ நகுல் எல்லாமும் பண்ணுகிறார். இன்று தேவயானி உங்களை பாராட்டியது மனதுக்குள் இருந்து பேசியதாகவும்,
உங்கள் இருவருக்குள்ளும் ஒரு இன்னொசென்ஸ் இருக்கிறது. அவர் கதாநாயகியாக நடித்ததை விட, ஒரே சீன்ல ( பஞ்சதந்திரம்) படத்தில் நடித்த, எவ்வளவு பெரிய மாத்திரை என்ற கதாபாத்திரம் ரொம்ப ஃபேமஸ். நானும் இந்த படத்தை உழமாற வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் பாய்ஸ் மணிகண்டன்,

நானும் நகுலும் பாய்ஸ் படத்தில் இருந்து பிரண்ட்ஸ். படத்தின் துவக்கத்தில் நானும் நகுலும் லிப் டூ லிப் கிஸ் பண்ணிப்போம். அதுவும் ஒரு தடவை இரண்டு தடவை இல்லை. ஷங்கர் சார் நிறைய டேக் எடுப்பாரு. ஒரு டேக்குக்கு 3 கிஸ். அதுவும் 15 முதல் 20 கிஸ் இருக்கும். அப்போ எத்தனை கிஸ் என்று கணக்கு பண்ணிக்கோங்க என்று சிரித்து கொண்டே கூறியவர், அவர் யாருன்னு கூட தெரியாது. அப்போதே ரொம்ப ஜாலியாக பழக துவங்கியதாக, இந்த மாதிரி நிறைய காமெடி படங்கள் வர வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்தார்.

MUST READ