Homeசெய்திகள்சினிமாநீங்க இல்லாம நான் இல்ல - சிம்புவின் அப்டேட்!

நீங்க இல்லாம நான் இல்ல – சிம்புவின் அப்டேட்!

-

- Advertisement -

“நீங்க இல்லாம நான் இல்ல”- தனது 50 ஆவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு  நடிகர் சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவு!

நீங்க இல்லாம நான் இல்ல - சிம்புவின் அப்டேட்!கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த STR48 திரைப்படத்தை 50வது படமாக மாற்றி  அறிவித்து, அதனை அட்மேன் சினி ஆர்ட்ஸ் என்ற தனது புதிய  தயாரிப்பு நிறுவனத்தை வைத்து தயாரிக்க உள்ளதாக சிலம்பரசன் அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தேசிங்  பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிலம்பரசனின் 48வது திரைப்படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இப்படம் தொடங்காமலேயே இருந்தது. அதிக பொருட்செளவில் வரலாற்று பின்னணியில் உருவாக இருந்த இப்படம் கனவு திரைப்படமாகவும் இயக்குனர் மற்றும் நடிகர் சிம்பு தெரிவித்திருந்தனர். இதற்காக பல நாட்களாக அதிக முடி தாடியுடன் புதிய தோற்றத்தில் காத்திருந்த சிம்புவிற்கு அப்புறம் தொடங்காமலேயே இருந்தது.

நீங்க இல்லாம நான் இல்ல - சிம்புவின் அப்டேட்!இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், மூன்று படங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். அதில் தற்போது தனது கனவு திரைப்படம் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அட்மேன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள சிலம்பரசன் அதன் முதல் படைப்பாக தனது 50 வது திரைப்படம் உருவாக உள்ளதாகவும் இதனை தேசிங் பெரியசாமி இயக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். கனவு திரைப்படம் என அறிவித்துள்ள சிம்பு “நீங்க இல்லாம நான் இல்ல” என பதிவிட்டுள்ளார். STR 48 என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் தாமதமானதால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

MUST READ