இயக்குனர் கடந்த 2012ல் விக்னேஷ் சிவன், சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தது இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி ஆகியோரின் நடிப்பில் எல்ஐகே எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படும் நிலையில் படமானது ரிலீஸக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் எல்ஐகே படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் எல்ஐகே படம் கைவிடப்பட்ட படம். அதில் சிவகார்த்திகேயன் நடிகை இருந்தார். லைக்கா நிறுவனம் என்னிடம் இது எதிர்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள கதை. இதற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். எனவே இதை தற்போதைய கதைக்களமாக அமைக்க முடியுமா? என்று கேட்டது. பாகுபலி படத்தை இப்போது நடப்பது போல் செய்ய முடியாது. அதேபோல் தான் என்னுடைய கதையையும் தற்போதைய கதைக்களமாக செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐகே படமானது சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த 17ஆவது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.