நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வருகை தந்த போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனும் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தார். அதேசமயம் இந்த வழக்கு தொடர்பாக திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் (இன்று) டிசம்பர் 13 நடிகர் அல்லு அர்ஜுனும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 14 நாட்கள் அவரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன் ….. உயிரிழந்த பெண்ணின் கணவர்!
-