இயக்குனர் மிஸ்கின் நடிகை ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க சொன்னதாக கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தற்போது ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருபவர் மிஸ்கின். இவரது இயக்கத்தில் கடந்த 2014ல் பிசாசு எனும் திரைப்படம் வெளியானது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதாவது ஒரு பேய் படம் என்றால் அதனை நாம் பயத்துடன் தான் பார்ப்போம். ஆனால் பேயை அன்புடனும் கருணையுடனும் வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்த படம் தான் பிசாசு. இந்த படம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் இயக்குனர் மிஸ்கின், நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஆண்ட்ரியா உடன் இணைந்து பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஆனால் இந்த படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக வெளி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் 2025 மார்ச் மாதம் இந்த படம் திரைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஸ்கின், நடிகை ஆண்ட்ரியா குறித்து பேசி உள்ளார்.அதன்படி அவர் பேசியதாவது, “நடிகை ஆண்ட்ரியாவை பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க சொன்னேன். கதையைக் கேட்டதும் அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். எனவே அதற்காக போட்டோஷூட் நடத்தினோம். ஆனால் நான், ஆண்ட்ரியாவை இலக்கியமாக பார்த்ததை போல் மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள். தவறான வழியில் பார்க்கக்கூடும் என்று நினைத்தேன். எனவே அந்தக் காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் அந்த நிர்வாண காட்சியை போஸ்டரில் போட்டிருந்தால் பிசாசு 2 திரைப்படம் இப்போது வெளியாகியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -