Homeசெய்திகள்சினிமாஅந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை.... நடிகர் அசோக் செல்வன்!

அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை…. நடிகர் அசோக் செல்வன்!

-

- Advertisement -

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை.... நடிகர் அசோக் செல்வன்!கடந்த ஆண்டில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக்செல்வன் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்றார் அசோக் செல்வன். அடுத்ததாக இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படத்தில் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் தனுஷுக்கு தம்பியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக அசோக் செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் தனுஷின் தீவிர ரசிகன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால் இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நடிகர் அசோக் செல்வன் தனுஷின் இட்லி கடை படத்தில் நடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

MUST READ