Homeசெய்திகள்சினிமாகாதல் படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை.... ஜோதிகா!

காதல் படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை…. ஜோதிகா!

-

- Advertisement -

நடிகை ஜோதிகா காதல் படங்களில் நடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.காதல் படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை.... ஜோதிகா!தமிழ் சினிமாவில் நடிகை ஜோதிகா, அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் குஷி, தெனாலி, பூவெல்லாம் கேட்டுப்பார் ஆகிய வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதே சமயம் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதைத்தொடர்ந்து நாச்சியார், ராட்சசி, பொன்மகள் என பல படங்களில் நடித்து மீண்டும் கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. இந்நிலையில் நடிகை ஜோதிகா, காதல் சம்பந்தமான கதைக்களத்தில் நடிப்பதை தான் விரும்பவில்லை எனவும் தற்போது அது தனக்கு பிடிக்காமல் போய்விட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் ஹீரோக்களை சுற்றி ஓடுவது போன்ற படங்களில் நடிப்பதை தான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.காதல் படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை.... ஜோதிகா!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சூர்யாவும், ஜோதிகாவும் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே ரசிகர்களும், சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து எப்போது நடிக்கப் போகிறார்கள்? என்று மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ