‘தங்கலான்’ படத்திற்காக கடுமையாக டயட்டில் இருந்து வருவதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் மாளவிகா தமிழில் அறிமுகமானார். அதையடுத்து விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். பின்னர் தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்தார்.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பசுபதி, பார்வதி, பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் கோலார் தங்கச் சுரங்கம் கதைக்களத்தை அடிப்படியாக வைத்து உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைக்க மாளவிகா தீவிர டயட்டில் இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அவர் கதாபாத்திரம் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மாளவிகா ‘தங்கலான்’ படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒல்லியான, இறுக்கமான உடலமைப்பை இயக்குநர் விரும்பினார். இதனால் எனக்குப் பிடித்த பிரியாணி சாப்பிடுவதை தியாகம் செய்துவிட்டு கடினமாகப் பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தேன். என் கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததும் மீண்டும் எனக்குப் பிடித்த கேக் ப்ரௌனி உள்ளிட்ட சாப்பாடுகளை விரும்பி சாப்பிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.