spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் - இளையராஜா

கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன் – இளையராஜா

-

- Advertisement -
kadalkanni
இளையராஜா என்ற பெயருக்கு கிடைத்த கர்வத்தை நான் எப்போதோ விட்டுவிட்டேன் என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. 80-களில் தொடங்கி இன்று வரை அவரது பாடல்களை ஒலிக்காத ஊரும் இல்லை, நாடும் இல்லை. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும், ஏன் இந்திய மொழிகளுக்கு கூட முடி சூட மன்னனாக விளங்குகிறார் இளையராஜா. முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைய சமுதாயமும் இவரது பாடல்களுக்கும், இசைக்கும் அடிமை என்று சொல்வதே நிதர்சனம்.

ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் விதமாக மால்யத என்ற ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, நான் கர்நாடக சங்கீதத்தில் கைதேர்ந்தவன் இல்லை. அதனால் இசைஞானி என்ற படத்திற்கு நான் தகுதி படைத்தவனா என்பது என்னைப் பொருத்தவரை கேள்விக்குறிதான். ஆனால், மக்கள் என்னை இசைஞானி என அழைக்கின்றனர். அதற்கு நான் தலை வணங்குகின்றேன்.

நான் விழாக்களில் ஹார்மோனியம் வாசித்தபோது மக்கள் கைதட்டி ஊக்கம் கொடுப்பார்கள். நான் சினிமா பாடல்களுக்கு தான் அப்போது வாசிப்பேன். ஒரு கட்டத்தில் அந்த கைதட்டல் யாருக்கு கிடைக்கிறது என சந்தேகம் வந்தது. நான் இசைத்த பாடல்களுக்கு மெட்டினை அமைத்தவருக்கு தான் அந்த கைதட்டல். அப்போதே எனக்கு கர்வம் சென்றுவிட்டது, இவ்வாறு இளையராஜா பேசியிருந்தார்.

MUST READ