அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும் ட்ரைலரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளன. எனவே வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் விடாமுயற்சி படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்தால் ரசிகர்கள் இதனை தல பொங்கலாக கொண்டாடி இருப்பார்கள். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாதது தனக்கு வருத்தம் அளித்ததாக மகில் திருமேனி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
#Magizh: I expressed my disappointment that #VidaaMuyarchi is not coming for Pongal🙁#Ajithkumar: Don’t feel bad, Whenever VM is releasing that day is a festival💣. The Title ‘VIDAAMUYARCHI’ is testing our patience, to prove it if we are worthy for it😎 pic.twitter.com/Ay25dqX0bv
— AmuthaBharathi (@CinemaWithAB) January 24, 2025
அதன்படி, “பொங்கலுக்கு விடாமுயற்சி வரவில்லை என்று வருத்தமாக இருந்தேன். அப்போது அஜித் சார் வருத்தப்படாதே, பண்டிகை நாளில் வரவில்லை என்றால் என்ன? விடாமுயற்சி வரும் நாள் தான் பண்டிகை நாள். விடாமுயற்சி என்ற தலைப்பு நம் பொறுமையை சோதித்து பார்க்கிறது. நாம் அதற்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் அஜித்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மகிழ் திருமேனி.