“நான் அப்படி சொல்லவே இல்லை” என்று தன்னை பற்றி வெளியான வதந்திகளுக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு தங்கள் பரஸ்பர விவாகரத்தை வெளிப்படையாக அறிவித்தனர். அதையடுத்து தற்போது வரையிலும் இந்த செய்திகள் குறித்து பல செய்திகள் வெளியான வண்ணம் தான் உள்ளன.
இதற்கிடையில் நடிகர் நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலா உடன் டேட்டிங் செய்து வருவதாகவும் பல செய்திகள் வெளியாகின. இதையடுத்து சமந்தாவிடம் நாகசைதன்யா, சோபிதா உடன் நெருக்கமாக இருப்பது பற்றி கேள்வி கேட்டதற்கு “அவர் யாருடன் உறவில் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. அந்த பெண் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்” என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அந்த செய்தியைப் பகிர்ந்த சமந்தா “நான் அப்படி சொல்லவே இல்லை” என்று மறுப்பு தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.