Homeசெய்திகள்சினிமாஅவரை நான் ரொம்ப நம்பினேன்..... ஆவணப்படத்தின் மூலம் பிரபுதேவாவை வம்புக்கிழுத்த நயன்தாரா!

அவரை நான் ரொம்ப நம்பினேன்….. ஆவணப்படத்தின் மூலம் பிரபுதேவாவை வம்புக்கிழுத்த நயன்தாரா!

-

நடிகை நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய ஸ்டார் நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இதற்கிடையில் இவர், இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அவரை நான் ரொம்ப நம்பினேன்..... ஆவணப்படத்தின் மூலம் பிரபுதேவாவை வம்புக்கிழுத்த நயன்தாரா!இவர்களின் திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த வகையில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இவர்களின் திருமண ஆவணப்படம் இன்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நெட்பிளிக்ஸ் தளத்தில் நள்ளிரவில் வெளியாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த ஆவணப்படத்தை ரசிகர்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்ததற்கு அடித்தளமாக இருந்த நானும் ரெளடி தான் படத்தின் காட்சிகளை இணைக்க அனுமதி வழங்காத தனுஷ் மீது குற்றம் சாட்டியிருந்தார் நயன்தாரா. கடந்த இரண்டு தினங்களாகவே இதுதான் பேச பொருளாக இருக்கிறது.அவரை நான் ரொம்ப நம்பினேன்..... ஆவணப்படத்தின் மூலம் பிரபுதேவாவை வம்புக்கிழுத்த நயன்தாரா! இந்நிலையில் இன்று வெளியான நயன்தாரா: பியான்ட் தி ஃபேரி டேல் என்ற ஆவணப்படத்தில் தனது முந்தைய காதல் குறித்து பேசி உள்ளார். அதாவது, “நான் சீதையாக நடித்த ஶ்ரீ ராம ராஜ்ஜியம் படம்தான் கடைசி படம் என்று நினைத்தேன். அந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. எனக்கு எல்லாமே சினிமா தான். இனி படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை அப்போது நான் எடுக்கவில்லை. அவர்தான் என்னிடம் சொன்னார். என்னை வேலை செய்யக்கூடாது என்று சொல்வார். எனக்கு அவர் எந்த வாய்ப்பையும் தரவில்லை. நானும் அவரை மிகவும் நம்பியதால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை பின்னால் தான் உணர்ந்தேன். தவறான நபரை நம்பி விட்டோமே என்று வருத்தப்பட்டேன். இருந்தாலும் பரவாயில்லை என்று என் மனதை தேற்றி கொண்டேன்” என்று பேசியிருந்தார் நயன்தாரா.

எனவே அந்த நபர் பிரபுதேவா தான் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏனென்றால் நடிகை நயன்தாரா, வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் நடிகர் சிம்புவுடன் கிசு கிசுக்கிசுக்கப்பட்டார். அவரை நான் ரொம்ப நம்பினேன்..... ஆவணப்படத்தின் மூலம் பிரபுதேவாவை வம்புக்கிழுத்த நயன்தாரா!அதைத்தொடர்ந்து விஜயுடன் இணைந்து வில்லு படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர், பிரபுதேவாவை காதலித்து வந்தார். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வது வழக்கமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நயன்தாரா தனது கையில், பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி இருந்தார். எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரின் காதல் பிரிவில் முடிந்தது. ஆகையால் தற்போது வெளியாகியுள்ள ஆவணப்படத்தில் நயன்தாரா, தனது முந்தைய காதலர் பிரபுதேவா குறித்து தான் பேசியுள்ளார் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ