நடிகை திரிஷா கடந்த 1999 இல் வெளியான ஜோடி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு வெளியான சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக தோன்றினார். கில்லி, உனக்கும் எனக்கும், அபியும் நானும் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார் . கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் தி ரோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று திரிஷா கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் திரிஷா கூறியதாவது, “என்னிடம் திருமணம் குறித்து பலரும் பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர். நான் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் திருமணம் செய்து கொள்பவர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து போன்ற பிரச்சனைகள் வருவது எனக்கு பிடிக்காது. நடிகர் அஜித் மிகவும் நல்லவர், ஜென்டில்மேன். அவர் நல்ல கணவராகவும் அப்பாவாகவும் இருக்கிறார். எந்தப் பெண்ணுமே அவரைப் போன்ற கணவர் வேண்டுமென்று ஆசைப்படுவாள்” என்று பேசியுள்ளார்.
அஜித் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து, ஜி, கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.